Home செய்திகள் சமூக சேவகரான மறைந்த “வரதகுமார்” அவர்கட்கு குவியும் அஞ்சலிகள்!

சமூக சேவகரான மறைந்த “வரதகுமார்” அவர்கட்கு குவியும் அஞ்சலிகள்!

258
0

தமிழ் தகவல் மையத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைவருமான மறைந்த திரு. வை.வரதகுமார் அவர்களுக்கு இரங்கல் செய்திகளும், அஞ்சலிகளும் வந்தவணம் உள்ளன.

சமூக சேவையாளராகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் தனது வாழ் நாளின் 40 ஆண்டு காலங்களை அர்ப்பணித்து செயலாற்றிய மதிப்பிற்குரிய வரதகுமார் அவர்களின் பாகுபாடற்ற சேவைக்கு மதிப்பளித்து பல அமைப்புக்கள், ஊர் சங்கங்கள், மக்கள் என தமது இரங்கல்களை வெளியிட்டும், சமூக வலைத்தளங்கள் ஊடாக பதிவிட்டும் வருகின்றனர்.

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மக்கள் மறைந்த திரு.வை.வரதகுமார் அவர்களுக்கு “உயர்ந்த மனிதர்” எனும் மதிப்பளித்து தமது இரங்கலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.