Home தமிழகச் செய்திகள் நாம் தமிழர் கட்சிக்கு “விவசாயி” சின்னம்!

நாம் தமிழர் கட்சிக்கு “விவசாயி” சின்னம்!

437
0

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விவசாயம் சார்ந்த சின்னம் கிடைத்திருப்பது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை மேகாலயாவில் உள்ள அரசியல் கட்சிக்கு ஒதுக்கி விட்டதால் அந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நிலையில், பொது சின்னம் ஒன்றை ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையகத்திடம் மனு கையளித்துள்ளது.

அதற்கமைவாகவே தற்போது தேர்தல் ஆணையகத்தால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்புடன் இருக்கும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.