Home Uncategorized தேர்தல் தொகுதி – கட்சிகளின் பங்கீடு – விபரம் வெளியிட்டார் ஸ்ராலின்

தேர்தல் தொகுதி – கட்சிகளின் பங்கீடு – விபரம் வெளியிட்டார் ஸ்ராலின்

161
0

தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க கூட்டணியின் 40 தொகுதிகளில் – தி.மு.க 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ.ஜே.கே 1 என பங்கிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிருகிறது என்ற முழுமையான தொகுதிப்பட்டியலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

அதனடிப்படையில்

தி.மு.க:- தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர்,காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளும்.

காங்கிரஸ்:-  கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ஆரணி, புதுச்சேரி, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, திருச்சி ஆகிய 10 தொகுதிகளும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:- கோயம்புத்தூர், மதுரை  ஆகிய 2 தொகுதிகளும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:- நாகப்பட்டிணம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளும்

விசிக:- சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளும்

மதிமுக:- ஈரோடு தொகுதியும்

முஸ்லிம் லீக்:- இராமநாதபுரம் தொகுதியும்

ஐ ஜே கே:- பெரம்பலூர் தொகுதியும்

கொங்கு மக்கள்:- நாமக்கல் தொகுதியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.