
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தற்போதய தலைவருமான ராகுல் காந்தி இன்றையதினம் தமிழகம் வருகிறார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல் தடைவையாக தமிழகம் வரும் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு தமிழகம் எங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக கூட்டம் நடைபெறும் நாகர்கோவில் பகுதி எங்கும் அதி உயர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், வீரமணி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வை.கோ ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டம் திமுக கூட்டணியின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்க்கும் என கருதப்படுகிறது.