Home செய்திகள் மட்டக்களப்பிலும் ஆசிரியர்கள் கறுபுப் பட்டி அணிந்து போராட்டம்:

மட்டக்களப்பிலும் ஆசிரியர்கள் கறுபுப் பட்டி அணிந்து போராட்டம்:

204
0

மட்டக்களப்பில் உள்ள பல பாடசாலைகளில் இன்று ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கறுப்பு பட்டிகளை தமது ஆடைகளில் அணிந்தும், கைகளில் கட்டியும் பாடசாலையின் வெளிப்புறமாக பிரதான வாயில் அருகில் ஆசிரியர்கள் அனைவரும் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (13) நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் ஓர் அங்கமாகவே இப் போராட்டம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.