Home செய்திகள் “இரட்டை மெழுகுவர்த்தி” சின்னத்திற்கு தேர்தல் ஆணையகம் மறுப்பு!

“இரட்டை மெழுகுவர்த்தி” சின்னத்திற்கு தேர்தல் ஆணையகம் மறுப்பு!

228
0

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு நாம் தமிழர் கட்சியின் “இரட்டை மெழுகுவர்த்தி” சின்னத்தை பதிய தேர்தல் ஆணையகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை மேகாலயாவில் உள்ள அரசியல் கட்சிக்கு ஒதுக்கி விட்டதால் அந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது.

இதநால் பொது சின்னம் ஒன்றை ஒதுக்குமாறு நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையகத்திடம் மனு கையளித்துள்ளது.

தேர்தல்களில் போட்டியிடும் போது நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுவது வழக்கம். அதன்படி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சி இருந்த வேளையில் இவ் அறிவித்தல் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.