Home செய்திகள் 200 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்!

200 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்!

237
0

பொள்ளாச்சியில் இடம்பெற்ற 200 இளம் பெண்கள் மீதான “பாலியல் வன்கொடுமை” விவகாரம் தமிழகத்தில் மட்டுமன்றி உலகத் தமிழர்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இக் கொடூரங்களை வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி ஒன்று வெளி வந்துமுள்ளது. அதில் ஒரு பெண் அழுது, கெஞ்சி, அலறும் ஒலிப்பதிவு உலகத் தமிழர்களை பொங்கியெழ வைத்துள்ளது. இது போல் 1100 காணொளிகள் இருப்பதாக தமிழகத்தின் முதன்மை ஊடகங்களில் ஒன்றான “நக்கீரன்” தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஸ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய மூன்று பேருக்கு, 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேலை, பாலியல் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அறிவித்துள்ளனர்.

இக் கொடூரச் செயலை புரிந்த மனித நேயமற்ற கூர மிருகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள், கலைப்பிரிவு மாணவர்கள், மகளிர் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என ஆர்ப்பாட்டம், பேரணி, போன்ற போராட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.