Home முக்கிய செய்திகள் 11 இளைஞர் கொலை : ஒப்புக்கொண்ட வசந்த கரன்னஹொட

11 இளைஞர் கொலை : ஒப்புக்கொண்ட வசந்த கரன்னஹொட

225
0

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னஹொட.

நேற்றைய தினம் (11) இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன் வழங்கிய வாக்குமூலத்திலேயே இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தலைமறைவாக இருந்துவந்த அட்மிரல் வசந்த கரன்னஹொட, உச்சநீதிமன்றத்தில் கட்டளைக்கு அமைய நேற்றுக்காலை 9 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்த நிலையில், சுமார் 8 மணிநேரம் இடம்பெற்ற தொடர் விசாரணைகளின் போதே மேற்படி தகவல் உள்ளிட்ட பல விடையங்களை வாக்குமூலமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 14 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னஹொட, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோயோருக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.