Home தமிழகச் செய்திகள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்க கோரி திமுக போராட்டம்:

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்க கோரி திமுக போராட்டம்:

194
0

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதந் ஓர் அங்கமாக பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே உள்ளது. பெண்கள் ஆணையம் தலையிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முழங்கி போராட்டம் நடத்தப்படுகிறது.