Home தாயக செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்

172
0

இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ் அலுவலகத்தினை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்து குறித்த அலுவலகத்தினைச் சுதந்திரமாகச் செயற்படவும் அனுமதிக்கவேண்டும்.

அண்மையில் ஐ.நா ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை எமக்கு சற்றே ஆறுதலளிக்கின்றது. நாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் குறித்த அறிக்கை எம்மை உற்சாகமடையச் செய்திருக்கின்றது.

எனவே இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையில் காலநீடிப்பு வழங்கப்படக் கூடாதென்பதில் நாம் ஜெனீவாவில் எமது அழுத்தங்களைத் தொடர்ந்தும் பிரயோகிப்போம்” அத்தோடு இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் அமையவேண்டியதன் அவசியத்தையும் நாம் ஜெனீவா கூட்டத்தொடரில் வலியுறுத்த இருக்கிறோம் என்றார்.