Home செய்திகள் இலங்கைத் தமிழரிடமே தமிழ் வாழ்கிறது: நகைச்சுவை நடிகர் விவேக்

இலங்கைத் தமிழரிடமே தமிழ் வாழ்கிறது: நகைச்சுவை நடிகர் விவேக்

195
0

கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழ்மொழியை யாராலும் அழிக்க முடியாது என தென்னிந்திய தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற “சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு” தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் நகைச்சுவை நடிகர் விவேக்கின் வருகையை அறிந்து பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், விவேகானந்தரின் நூல் தொகுதியொன்றும் நடிகர் விவேக்கிற்கு வழங்கப்பட்டது.