
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞ்ஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகதின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞ்ஞனையே காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் மதுபோதையில் இருந்ததாகவும், தன்னை பற்றி கேட்டறிந்து கொள்ளுமுன்னரே தன்னை கடுமையாக தாக்கியதாகவும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.