Home செய்திகள் புதிய கூட்டணி – அனைத்துக் கட்சிகளுக்கும் ரணில் அழைப்பு:

புதிய கூட்டணி – அனைத்துக் கட்சிகளுக்கும் ரணில் அழைப்பு:

224
0

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி இணைந்து ஆரம்பிக்கவுள்ள புதிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்துக்கொள்ளுமாறு சகல தரப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றைய (10) தினம் பாணந்துறையில் நடைபெற்ற ”சிறிகொத்தா கிராமத்திற்கு” என்ற வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் புதிய கூட்டணியுடன் இணைந்துக்கொள்ளுமாறு சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.