Home தாயக செய்திகள் கால அவகாசம் இல்லை எனில் ஐ.நாவின் கண்காணிப்பு எதற்கு?

கால அவகாசம் இல்லை எனில் ஐ.நாவின் கண்காணிப்பு எதற்கு?

234
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவில்லை அரசு மீதான கண்காணிப்பே தொடரவுள்ளது என கூட்ட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறி வருகின்றார். அப்படியாயின் ஐ.நாவின் கண்காணிப்பு எதற்கு? என eprlf அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நான்கு ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக எதையும் செய்யவில்லை.

இந் நிலையில், ஐ.நா மனித உரிமை பேரவையில் வரவுள்ள தீர்மானத்தில் கால அட்டவனை இருந்தால் மட்டுமே நாம் அதனை ஏற்றுக்கொள்ள முடியும்.அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் அரசு அதனை எந்தளவுக்கு சாத்தியமாகும்.

ஏனெனில் இந்த ஆண்டு அடுத்த ஆண்டு இலங்கைக்கு தேர்தல் காலம் ஆகும். அப்படியானால் அவர்கள் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் எதனையும் செய்ய மாடடார்கள்.