Home தாயக செய்திகள் மூங்கிலாற்றில் விபத்து – நால்வர் காயம்:

மூங்கிலாற்றில் விபத்து – நால்வர் காயம்:

217
0

முல்லைத்தீவு மாவட்டம் – மூங்கிலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விசுவமடுவிற்கும், புதுக்குடியிருப்பிற்கும் இடைப்பட்ட மூங்கிலாறு எனும் இடத்தில் முல்லைத்தீவு வீதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறுக்குத் தெரு ஒன்றிலிருந்து வந்த முச்சக்கர வண்டி முல்லைத்தீவு வீதியில் ஏறிய வேளை அவ் வீதியால் வந்த உந்துருளி மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டதாக அறிய முடிகிறது.