
“தமிழ் மக்கள் கூட்டணி” கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமது பணிமனை ஒன்றை கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இல.258 இல் திறந்துவைத்துள்ளது.
தமிழர் பண்பாட்டிற்கமைய தவில், நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க புதிய பணிமனைக்கு அனைவரும் அழைத்துவரப்பட்டனர்.
இந் நிகழ்வில் நீதியரசரும், முன்னாள் வடமாகாண சபையின் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான CV. விக்னேஸ்வரன் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து நிகழ்வில் கட்சியின் கீதம் அறிமுகப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழ் மக்கள் கூட்டணி உறுப்பினர்கள், அதாரவாளர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

