Home முக்கிய செய்திகள் சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கடும் கண்டனம்:

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கடும் கண்டனம்:

216
0

அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறீலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்திருப்பதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வின் கட்டுப்பாட்டில் இருந்த படையினர் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், சுட்டிக்காட்டப்பட்டுள்ள சூழலில் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவால் சிறீலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்திருப்பது அதிர்ப்தி அழிப்பதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.