
கடைமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை மீன்கடைக்காரர் ஒருவர் சரமாரியாக வெட்டியதில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத இயங்கிவந்த மீன் கடையை அகற்ற முற்பட்ட போதே குறித்த நபர் காவல்துறை உத்தியோகஸ்தரை வெட்டியுள்ளார்.
உடனடியாகவே குறித்த மீன்கடைக்காரர் ஏனைய காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பள்ளக்கட்டுவை நகரின் விஸ்தரிப்பிற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினருடன் இணைந்து காவல்துறையினரும் கடைமையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போதே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மீன்கடையை அகற்ற, குறித்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுத்த போது, மீன்கடைக்காரருக்கும், அவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கத்தி வெட்டுக்கள் வரை சென்றுள்ளது.
இதனால் பலத்த வெட்டுக் காயங்களுடனான காவல்துறை உத்தியோகஸ்தர் ஆபத்தான நிலையில் தியத்தலாவை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.