Home தமிழகச் செய்திகள் றாகுல், ஸ்டாலின் கூட்டு – 13 தொகுதிகள் பேரம்:

றாகுல், ஸ்டாலின் கூட்டு – 13 தொகுதிகள் பேரம்:

184
0

காங்கிரஸின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தைக் குழு இன்று தங்கள் கட்சிக்கு விருப்பமுள்ள 13 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க தலைமையிடம் ஒப்படைத்துள்ளது.

இந்தப் பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுக்குப் பிறகு தி.மு.க. விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் தி.மு.க. விடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பட்டியலில் 10 தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

அந்த 13 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் காங்கிரஸ் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது சம்மந்தமாக ஆலோசனை நடத்தி வரும் தி.மு.க மற்றக் கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்த பின்னர் விரைவில் காங்கிரஸுக்கான தொகுதிகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.