Home தமிழகச் செய்திகள் அ.தி.மு.க உடன் இணைகிறது தே.மு.தி.க!

அ.தி.மு.க உடன் இணைகிறது தே.மு.தி.க!

191
0

திடீர் திருப்பமாக அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணையவுள்ளதாகவும், அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அ.தி.மு.க தரப்பிலிருந்து சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க குறித்தும், ஜெயலலிதா குறித்தும் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விமர்சனம் செய்ததால், தே.மு.தி.க. வை அ.தி.மு.க தனது கூட்டணியில் சேர்க்காது என்றே கருதப்பட்ட நிலையில் இன்று இத் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.