Home செய்திகள் உடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் நிறுவ மேலதிக நீதவான் உத்தரவு:

உடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் நிறுவ மேலதிக நீதவான் உத்தரவு:

194
0

சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு உடைக்கப்பட்ட வளைவை அதே இடத்தில் உடனடியாக, மீண்டும் நிறுவுமாறு மன்னார் மேலதிக நீதவான் சற்று முன் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைய மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபரால் மன்னார் மேலதிக நீதிவானின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்தே மேற்படி அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தனது முகப்பு புத்தகத்தில்உம் பதிவுசெய்துள்ளார்.