Home தாயக செய்திகள் இராணூவப் பிடிக்குள் இருந்த 20 ஏக்கர் காணி மக்களிடம் மீள ஒப்படைப்பு:

இராணூவப் பிடிக்குள் இருந்த 20 ஏக்கர் காணி மக்களிடம் மீள ஒப்படைப்பு:

227
0

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் கடந்த 28 ஆண்டுகளாக இராணுவப் பிரிக்குள் இருந்த பெரு நிலப்பரப்ப்இன் ஒரு பகுதி இன்று காணி உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தின் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட NI 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள காணிகளே இவ்வாறு இராணுவத்தினரால் மக்கள் பாவனைக்கு மீள கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி காணி விடுவிப்பதற்கான பத்திரங்களை, யாழ்.மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வழங்கினார்.

இன்றைய இந்த நிகழ்வில் அப்பிரதேச மக்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

காணி உரிமையாளர்கள் காணி உரிம பத்திரங்களை பொறுப்பேற்று தமது நிலங்களை பாதுகாக்குமாறு யாழ் மாவட்ட செயலர் திரு.நா.வேதநாயகம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.