Home தாயக செய்திகள் இந்து, கிறிஸ்தவ மோதல் விவகாரம் – ஆளுநரை சந்தித்தார் இந்து குருக்கள் சபையின் தலைவர்:

இந்து, கிறிஸ்தவ மோதல் விவகாரம் – ஆளுநரை சந்தித்தார் இந்து குருக்கள் சபையின் தலைவர்:

217
0

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் இன்று (4/3/19) சந்தித்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

முக்கிய விடையமாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஆளுநர் அவர்கள் , இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து மதங்களினுடைய பிரதிநிதிகள் குழுவொன்றை அமைத்து அதனூடாக இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதந்பிரகாரம் – இந்து மதத்தை சேர்ந்த மூன்று (3) பேர், கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மூவர் (3) , பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (1) , அரச அதிபர் சார்பில் ஒருவர் (1) மற்றும் பொது அமைப்பை சேர்ந்த ஒருவர் (1) உள்ளடங்கலாக மொத்தம் ஒன்பது (9) பேர் கொண்ட குழு ஸ்தாபிக்கப்படும் என்றும் ஆளுநர் சுரேன் குறிப்பிட்டுள்ளார்.