
திடீர் சூறாவளி காரணமாக அமெரிக்காவில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயங்களுக்கு உள்லான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நேற்று பயங்கர சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் இடிந்து விழுந்தும், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் மேற்கூரைகள் காற்றில் பறந்தும், கார்கள் புரண்டும் கிடக்கின்றன. மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து காணப்படுகின்றன. மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன.
இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.