Home உலக செய்திகள் விடுதலைப் புலிகள் பற்றி பாராளுமன்றில் சுட்டிக்காட்டிய பாக்கிஸ்தான் பிரதமர்:

விடுதலைப் புலிகள் பற்றி பாராளுமன்றில் சுட்டிக்காட்டிய பாக்கிஸ்தான் பிரதமர்:

202
0

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்ததாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தானில் சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவிக்கும் போதே அவர் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

2009 இன் பின்னர் ஆயுத மெளனிப்போடு தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியிலான செயற்பாடுகளை கைவிட்டுள்ள நிலையில், பாக்கிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருப்பதன் பின்னணி என்ன …? என்பது புதிராக உள்ளது.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்.

தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. ஆனால் “இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. எனவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

]]>