Home செய்திகள் வடக்கில் சேவையாற்ற 850 தமிழர்களை இணைக்கவுள்ளது சிறீலங்கா காவல்துறை:

வடக்கில் சேவையாற்ற 850 தமிழர்களை இணைக்கவுள்ளது சிறீலங்கா காவல்துறை:

221
0

வட மாகாணத்தில் பணியாற்ற புதிதாக 850 தமிழர்களை சிறீலங்கா காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார்.

ஆனால், சிறீலங்கா காவல்துறையின் இலட்சனையிலும் (லோகோ) சரி, அதன் கொடியிலும் (பிளைக்) சரி தமிழ் மொழி இல்லை! ஏன் …. ஆங்கில மொழி கூட இல்லை. ஆனால் வெளிப்பார்வைக்கு மும்மொழிக்கும் சம உரிமை என்பது போல் காவல்துறையினரின் சீருடையில் அணியும் துணியிலான சின்னத்தில் மட்டும் “மும்மொழிகள்” இருப்பதை காண முடியும். இந்த நிலையில் சிறீலங்கா காவல்துறையின் சேவை தமிழ் மக்களுக்கு எந்தளவு நியாயத்தன்மை வாய்ந்ததாக அமையும் என்ற கேள்வி உள்ளது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று 28/2/19 இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கூறுகையில்,

சுமார் 850 தமிழர்களை வடக்கில் சேவையில் ஈடுபடுத்தும் முகமாக இந்த நடவடிக்கை அமைகிறது. ஆகவே இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைந்துகொள்ள முன்வரவேண்டும்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினருமே உள்ளனர்.

இதனால் மேலதிக பொலிஸார் எமக்கு தேவையாக இருக்கின்றனர். இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபரை வடக்கு ஆளுநருடன் இணைந்து சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


]]>