Home செய்திகள் சமந்தா பவர் உரையாற்ற முன் வெளியேறிச் சென்ற மைத்திரி:

சமந்தா பவர் உரையாற்ற முன் வெளியேறிச் சென்ற மைத்திரி:

220
0

பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், மற்றும் முக்கிய இராஜதந்திரிகள் என பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து  வெளியேறிச் சென்றுள்ளார்.

நேற்று (28/2/19) கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே சிறப்பு அழைப்பாளராக வருகை தந்திருந்த சமந்தா பவரை அவமதிக்கும் முகமாக சிறீலங்கா ஜனாதிபதி நடந்துகொண்டுள்ளார்.

சிறிலங்கா அரசியல் குழப்பங்கள்  ஏற்பட்ட போது, சமந்தா பவர் தனது கீச்சகப் பக்கத்தில் சிறிலங்கா அதிபர் சிறிசேன, மற்றும் மகிந்த ராஜபக்சவை விமர்சித்து. காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வந்தமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சமந்தா பவர், காணாமல்போனோரின் உறவினர்கள், காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் காத்திருக்கின்றனர். அவர்கள் இழந்ததை மீளவும் வழங்க முடியாத போதும் அவர்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்பதொன்றே அவர்களின் கண்ணியத்தை காப்பதாக அமையும்.அத்தோடு யுத்திற்கு பின்னர் அதில் பாதிக்கப்பட்டவர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. எனக் கூறிய அவர் தொடர்ந்து கூறுகையில்,

கடந்த அண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது, ஜனநாயக அமைப்புகள் உறுதியாக செயற்பட்டதைப் பாராட்டினார்.  அரசியல் குழப்பங்களின் சூத்திரதாரியான, மகிந்த ராஜபக்ச அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

மேற்படி நிகழ்வில், பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், மற்றும் முக்கிய இராஜதந்திரிகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


]]>