20-02-2019 இன்று கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டப் பேரணி, ஏ-9 வீதியால் டிப்போ சந்தி வரை சென்றடைந்தது.
இலங்கையில் தற்போது பயங்கரவாதம் இல்லை என அரசு அறிவித்த போது ஏன் இன்னும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாத்திரம் நடைமுறையில் வைத்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

