
துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கும் உதவுகிறது.
துளசியில் நற்றுளசி, கருந்துளசி, செந்துளசி, நிலத்துளசி, கல்துளசி, நாய்த்துளசி, முள் துளசி எனப் பலவகை உண்டு.
துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி நஞ்சுகளை வெளியேற்றும். கெட்ட கொழுப்பை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். ஜீரண கோளாறு உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி துளசி சூரணத்தை 1 தேக்கரண்டி தேனில் கலந்து காலை இரவு உணவிற்கு பின்பு சாப்பிட்டு வந்தால், அந்த தொந்தரவு குறையும்.
மேலும், துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை குறைக்க வல்லது.
துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள் விரைவில் குணமாகும்.
10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். அதனுடன் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் கலையுடன் இருக்கும்.
]]>