
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தரின் இளையமகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.
இதநை உறுதிப்படுத்துவதாய், தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மத பெரியோர்கள் சில வாசகத்தை வாசிக்க குறளரசனும் அதனை உச்சரித்து இஸ்லாம் மதமாற்றம் செய்யப்படும் காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
இது குறித்து டி,ராஜேந்திரன் அவர்களை கேட்ட போது;
குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார்.
அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர்.
நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்ப்ளம் அனைத்து மதத்தின் குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன்’’ என்றார்.
]]>