Home செய்திகள் யாழ், மட்டுவிலில் கொடூர தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ், மட்டுவிலில் கொடூர தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

258
0

யாழ், மட்டுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மராட்சியின் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுபேதன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முந்தினம் இரவு சுமார் 9:00 மாணியளவில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருள் சூழ்ந்த இடத்தில் மறைந்திருந்த இனந்தெரியாதோர் இருவர் இவ் இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர். கத்தியை அவரை நீக்கி வீசிய வேளை அதிலிருந்து தப்பிக்க முயன்ற குறித்த இளைஞன் நிலைதடுமாறி வீதியில் விழுந்துள்ளார்.

தாக்குதல் தாரிகள், விழுந்த இளைஞனை கேபிள் கம்பிகளால் மிக கொடூரமாக தாக்கிவிட்டு பின்னர் கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளனர். அவ் வேளை வாகனம் ஒன்று வெளிச்சத்துட்அன் வருவதை கண்டதும் இளைஞனை விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியுள்ளனர்.

அதன் பின் வீதியால் வந்தவர்களின் உதவியுடன் குறித்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இத் தாக்குதலை ஆவா குழு மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

]]>