Home செய்திகள் ஆளுநர் சுரேன், தூதுவர் தரன்ஜித் சிங் சந்திப்பு:

ஆளுநர் சுரேன், தூதுவர் தரன்ஜித் சிங் சந்திப்பு:

204
0

இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை இந்திய தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய தூதுவர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வரும் இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சார்பிலும் அரசின் சார்பிலும் வட மாகாண மக்கள் சார்பிலும் ஆளுநர் தனது நன்றியினை தெரிவித்தார்.

]]>