Home செய்திகள் போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை! மறந்து மன்னித்து நாட்டை கட்டி எழுப்புவோம் என்கிறார் ரணில்!!

போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை! மறந்து மன்னித்து நாட்டை கட்டி எழுப்புவோம் என்கிறார் ரணில்!!

239
0

போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை. அவற்றை மறந்து மன்னித்து உண்மையை கண்டறிந்து அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப வேண்டும். ஆகையினால் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களை இத்துடன் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலேயே இதனை பிரதமர் தெரிவித்தார்.

போர்குற்றச்சாட்டுக்கள் இரண்டு தரப்பிலும் உள்ளன. இலங்கை ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சின் செயலலாளர் கொல்லப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள், படை வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதேபோல இராணுவத்தினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக இரண்டு தரப்பும் மாறி மாறி வழக்கு தொடர்வது என்றால் தொடர்ந்தும் செய்துகொண்டு இருக்கலாம்.

ஆகவே இவற்றை மறந்து மன்னித்து உண்மையை கண்டறிந்து அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்ப வேண்டும். தென் ஆப்பிரிக்காவின் உதாரணத்தை நாம் இங்கு பின்பற்றவேண்டும். இந்த விடயத்தில் இரு தரப்பும் மறந்து மன்னிப்பதே சிறந்த தீர்வாகும் என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் இந்த கருத்தை தெரிவித்ததபோது அங்கு பிரசன்னமாகி இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த விதமான ஆட்சேபனையையோ மறுப்பையோ தெரிவிக்காமல் அவரது கருத்துக்கு உடன்படுவதுபோல வாய்மூடிகளாக இருந்ததை காணமுடிந்தது.

]]>