Home செய்திகள் இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற 14 பேரின் பெயர்கள் முன்மொழிவு!

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற 14 பேரின் பெயர்கள் முன்மொழிவு!

184
0

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் மரண தண்டனைக் கைதிகளான 48 பேரில் 14 பேரின் பெயர்கள் முதலாவதாக தூக்குதண்டனையை நிறைவேற்றும் முகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இப் பெயர் பட்டியலில், பாகிஸ்தான் பிரஜைகள் நால்வரும் இலங்கைப் பெண்ணொருவரும் இருபதாக அறியமுடிகிறது.

மரண தண்டனையை நடைமுறைபடுத்தக் கூடிய குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, ஜனாதிபதியால், நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எவ்விதத் தடங்கலுமின்றி மரண தண்டனை நிறைவேற்றக்கூடிய 14 பேரின் பெயர்ப் பட்டியலை தயாரித்து ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில், ஜனாதிபதியிடம் அந்தப் பெயர்கள் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்ட போதும் அந்தத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், சட்ட மா அதிபருக்கோ அல்லது நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சுக்கோ, இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

]]>