Home செய்திகள் கனடா -நா.க.த.அ தேர்தல் ஆணையத்தின் மக்கள் சந்திப்பு:

கனடா -நா.க.த.அ தேர்தல் ஆணையத்தின் மக்கள் சந்திப்பு:

242
0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாவிற்கான தேர்தல் ஆணையகத்தின் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

மேற்படி சந்திப்பு 10-02-2019 அன்று காலை 10:30 மணியளவில் ‘McCowan & Ellesmere’ சந்தியில் அமைந்துள்ள JC மண்டபத்தில் நடைபெற்றது.

நா க த அரசாங்கத்தின் தேர்தல் ஆணையாளர் திரு.பொன் பாலராஜன் தலைமையில் நடைபெற்றது. கனடாவிற்கான தேர்தல் ஆணையாளர் திரு.சிவா இரட்ணசிங்கமும், கற்றலோனியாவின் கனடாவுக்கான பிரதிநிதி ‘Mr Joseph Terence’ அவர்களும், இந்நிகழ்வில் பங்கு கொண்டனர்.

அரசியல் ஆய்வாளரும், ஊடகவியளாளருமான திரு. இந்திரன் ரவீந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்த சந்திப்பை றோய் விக்னராஜ் அவர்கள் நெறிப்படித்தியிருந்தார்.

இச்சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடா தேர்தல் ஆணையாளரால் இவ் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:

1- வேட்புமனு சமர்ப்பித்தல் மார்ச் 10ந் திகதி முதல் மார்ச் 20ந் திகதி நள்ளிரவு வரை

2- வேட்புமனு மீளப் பெறுதல் மார்ச் 23ந் திகதி நள்ளிரவு வரை

3- வேட்பாளர் அறிவிப்பு மார்ச் 25ந் திகதி

4- தேர்தல் ஏப்ரல் 27ந் திகதி

வேட்பாளர்களுக்கான தகமைகள்:

1- 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

2- கனடாவில் வசிப்பதற்குரிய அனுமதி உள்ளவராக இருத்தல் வேண்டும். (குற்றம் புரிந்து தண்டனை பெறாதவராக இருத்தல் வேண்டும்)

3- தமிழ் உணர்வாளராக இருத்தல் வேண்டும்

4- தமிழ் சமூகத்தில் இருந்து மூவரினுடைய ஆதாரப்படுத்தல் வேண்டும்

5- குடியிருப்பிற்கான ஆதாரம் வேண்டும்

6- வேட்பாளர் கட்டுப்பணம்: இளையோர், பெண்களை தேசியப் பணியில் ஈடுபடுவதை ஊக்கிவிக்கும் முகமாக அவர்களுக்கு $1,500, மற்றவர்களுக்கு $2,000.

தேர்தல் படிவங்களும்,விதிமுறைகளும்

இணையத்திலும், நா. த. அரசாங்க ரொறொன்ரோ காரியாலயத்திலும் மார்ச் 1ந் திகதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

இணையம்: https://tgteelection.org/tamil/standing-for-election/

காரியாலய முகவரி: 24-5210 Finch Ave East

தொலைபேசி: 416-751-8483 #4

தேர்தலில் தெரிவானவர்களின் கட்டுப் பணத்தில் 50% மீளளிக்கப்படும். படிவங்களை மார்ச் 23ந் திகை நள்ளிரவுக்கு முன் மீளப்பெறுபவர்களுக்கு முற்றாக பணம் கையளிக்கப்படும். கனடாவில் 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஒன்ராரியோ மாகாணத்தில் 15 உறுப்பினர்களும், ஒன்ராரியோ கிழக்குப் புறமாக உள்ள மாகாணத்தில்(கியூபெக் உட்பட) 5 உறுப்பினர்களும், ஒன்ராரியோ மேற்குப் புறமாக உள்ள மாகாணத்தில் 5 உறுப்பினர்களும், தெரிவு செய்யப்படுவார்கள்.

இச்சந்த்திப்பில் ரொறன்ரோ வில் உள்ள அனத்து ஊடகங்களும்,பொது மக்களும் கலந்து கொண்டமைக்கு கனடா தேர்தல் ஆணையர் சிவா இரட்ணசிங்கம் நன்றி தெரிவித்ததை தொடர்ந்து ஒரு மணியளவில் நிறைவுற்றது.

]]>