இலங்கை பாடசாலை கால்பந்து சங்கத்தினால் நடத்தப்படும் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான முதல் நிலை கால்பந்து தொடரில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு எதிரான போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
களுத்துறை வேர்ணன் யூ. பெர்ணான்டோ விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக திறமையை வெளிப்படுத்தின. இந்நிலையில் யாழ். மத்திய கல்லூரி அணி கடைசி நேரத்தில் கோல் புகுத்த அது வெற்றி கோலாக அமைந்தது. இந்தத் தொடரில் பி குழுவில் இடம்பெற்றிருக்கும் யாழ்.
மத்திய கல்லூரியின் இரண்டாவது போட்டி இதுவாகும். அந்த அணி தனது முதல் போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணியை 6–4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.