வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும் என அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 20ம் திகதி மருந்தகம் மற்றும் உணவகம் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி அன்றைய தினம் பூரண ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அக் கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஒரு சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தனர்.