நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக இம்முறை 8388 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாராளுமன்றத்திற்கு தேவையான 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மட்டும் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவர் என்பதோடு, ஏனைய 29 பேரும் அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களை சேர்ந்த 8388 வேட்பாளர்கள் தீவிரமாக தமது பிரச்சார நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.