‘நாட்டின் இனங்கள் மதங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது அவசியம், 13வது திருத்தம் சட்டபுத்தகத்தில் இருக்கின்றதுதானே?”
‘சட்டத்தி;ல் உள்ளதை நடைமுறைப்படுத்தவேண்டும்,அதனால் நாட்டின ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது,நீதிமன்ற தீர்ப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது,ஆகவே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய கடப்பாடு எங்களிற்குள்ளது,ஏனைய தலைவர்கள் இதனை தெரிவிப்பதற்கு அஞ்சுகின்றனர் என்பது எனக்கு தெரியும்,நான் அப்படியில்லை, நான் சரியான விடயங்களை ஒளிவுமறைவின்றி தெரிவிப்பேன்” என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்;பாளர் சஜித்பிரேமதாச பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்
சண்டே டைம்சிற்கான பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது.
கேள்வி – தேர்தல் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு இன்னமும் ஒரு வாரகாலம் உள்ளது எப்படி உணர்கின்றீர்கள்?
பதில்- வெற்றி நிச்சயம்
கேள்வி – ஏன் அப்படி சொல்கின்றீர்கள்
பதில் – ஏன் என்றால் வெற்றி நிச்சயம்
கேள்வி- உங்களிற்கு யார் சவால்?
பதில் -ரணிலா அனுரவா நாமலா?
பதில்- எனது சவால் நாட்டை மீட்டை கட்டியெழுப்புவதே, நீங்கள் மேலே குறிப்பிட்ட எவரும் எனக்கு சவாலாகயில்லை.
கேள்வி- சஜித்தினால் அனுரகுமாரவினை தோற்கடிக்க முடியாது,என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்,நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
பதில்- செப்டம்பர் 22 ம் திகதி பார்க்கலாம், நான் அரசியல் ரீதியில் அனுபவம் அற்றவன் இல்லை,நாட்டை மீள கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்வதே எனது ஒரேநோக்கம்.
நாங்கள் திட்டமிட்டமிட்டுள்ள விடயங்களை முன்னெடுப்போம்.
சிறுவன் போல பதிலளிப்பதற்கு நான் தயாரில்லை.
கேள்வி – வெற்றிவாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கே காணப்படுகின்றது என சிலர் தெரிவிக்கின்றனரே?
பதில்- நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஆசீர்வாதம் ஐக்கிய மக்கள் சக்திக்கே உள்ளது.நாட்டின் பெரும்பான்மையான அதிகளவான அனைத்து சமூகங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்களை நாங்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றோம்.இதன் காரணமாகவே எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேள்வி – சிலர் சஜித்தும் ரணிலும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பவேண்டும் என தெரிவிக்கின்றனர், இதற்கான வாய்ப்புள்ளதா?இதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றதா?
பதில்- நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை இணைப்பதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணலாம் என நாங்கள் கருதவில்லை.
எங்கள் எதிர்பார்ப்பும் மக்களிற்கான எங்களின் வேண்டுகோளும் அது இல்லை.
நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியின் தீவிரதன்மையை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சிறந்த எதிர்காலத்தை அவர்களின் பிள்ளைகளிற்கு வளமான நாட்டை உருவாக்குவதற்காக மக்களைஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டிற்கு வேறு மாற்றீடு இல்லை.
கேள்வி- நாடு தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் பாதையை திடீர் என மாற்றினால்,முன்னரை விட மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படும் என்ற எண்ணம் உள்ளதே?
பதில்- அவ்வாறான சி;ந்தனை எதுவும் இல்லை அவ்வாறான கருத்தினை உருவாக்க முயல்கின்றனர்,நாடு பெறக்கூடிய வெற்றியை தடுப்பதற்காக இதனை செய்கின்றனர் இதற்கு பலியாகவேண்டாம்.
கேள்வி – ஜனாதிபதி முன்வைத்துள்ள அமைப்புமுறையை அகற்றினால் அது நடக்கலாம் இல்லையா?
பதில்- ரணில் விக்கிரமசி;ங்க என்ன அமைப்புமுறையை ஏற்படுத்தியுள்ளார்?கோடீஸ்வரர்களிற்கு சாதகமான விதத்தில் நடந்துகொள்வது?செல்வந்தர்களிற்கு பதவிகள் சலுகைகளை வழங்குவது? மோசடியான பணப்பரிமாற்றம் இதனையே அவர் முன்வைத்து அமைப்பு முறை என்கின்றீர்களா?
கேள்வி – நீங்கள் ஜனாதிபதியானால் சர்வதேச நாணயநிதியத்தினை எவ்வாறு கையாள்வீர்கள்?
பதில் – உங்கள் கேள்வியே தவறானது, நான் ஜனாதிபதியானால் என்பது இல்லை , நான் நிச்சயம் ஜனாதிபதியாவேன் நாங்கள் ஏற்கனவே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு புரிந்துணர்விற்கு வந்துள்ளோம்.
கேள்வி – என்ன புரிந்துணர்வு?சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையில் காணப்படும் எந்த விடயங்கள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள்?
பதில்-பொதுவாக சொல்வதென்றால் நாட்டுக்கு அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்,அதனை செய்யும் போது பொதுமக்கள் மீதான தேவையற்ற வரிச்சுமைகளை நீக்கவேண்டும்.
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மீது வரிகளை திணித்துள்ளது.
மிகச்செல்வந்தர்களிற்கு அவ்வாறான சுமையில்லை.அவர்களிற்கு மிகச்சிறந்த வசதிகள் கிடைத்துள்ளன.அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு பொதுமக்கள் தியாகம் செய்யவேண்டு;ம் என்கின்றனர்.
முதலில் தலைவர்களே தியாகம் செய்யவேண்டும்,நான் அதற்கு முன்னுதாரணமாவேன்.
கேள்வி – நீங்கள் மாகாணசபைகளிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு இணங்கவில்லையே?
பதில் – நான் 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்திருக்கின்றேன்,நான் இன்றும் அதனை தெரிவிப்பேன் நாளையும் தெரிவிப்பேன்.
நாட்டின் இனங்கள் மதங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது அவசியம், 13வது திருத்தம் சட்டபுத்தகத்தில் இருக்கின்றதுதானே?
சட்டத்தி;ல் உள்ளதை நடைமுறைப்படுத்தவேண்டும்,அதனால் நாட்டின ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது,நீதிமன்ற தீர்ப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது,ஆகவே 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய கடப்பாடு எங்களிற்குள்ளது,ஏனைய தலைவர்கள் இதனை தெரிவிப்பதற்கு அஞ்சுகின்றனர் என்பது எனக்கு தெரியும்,நான் அப்படியில்லை, நான் சரியான விடயங்களை ஒளிவுமறைவின்றி தெரிவிப்பேன்.