13ஐ னடைமுறைபடுத்தி, ஒரே நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்படும்: யாழில் சஜித்

”13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அரசியல் உரிமையை வலுப்படுத்துவதோடு, ஒரே நாட்டுக்குள் அதிகாரம் பகிரப்பட்டு, இதுவரை இல்லாமல் போயிருந்த மாகாண சபை உறுப்புரிமையும் பெற்றுத் தருவோம்.

அதற்காக குறுகிய காலத்துக்குள் மாகாண சபை தேர்தல் நடத்துவோம். அதிகாரம் இழந்து காணப்படுகின்ற மாகாண சபைகளுக்கு தொடர்ந்து அதிகாரத்தை வழங்குவோம்.

இவ்வாறு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் மிகவும் கீழ் மட்டத்திலே காணப்படுகின்றது. எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. தொழிற்சாலைகள் உருவாக்கப்படாமல் தொழில் வாய்ப்புகள் இல்லாத போயிருக்கின்றது. கல்வியிலும் சுகாதாரத்திலும் குறைபாடுகள் காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்த உடனே வட கிழக்கை மையமாகக் கொண்ட சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்போம்.

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் தொகுதி வாரியாக உற்பத்தித் தொழிற்ச்சாலைகள் உருவாக்க நடவடிக்கை எடுப்போம்.

தகவல் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்கப்படுவதோடு, தொழில் முனைவர்கள் 10 இலட்சம் பேரையும் உருவாக்குவோம். அதன் ஊடாக மாவட்டத்தில் இருக்கின்ற இளைஞர்களால் புதிய தொழில் முனைவர்களாக இணைந்து கொண்டு, உற்பத்தி கொள்ளளவின் மூலம் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பை வழங்க முடியும்.

யுத்தத்தினால் வறுமை அதிகரித்து காணப்படுவதோடு இந்த வறுமை தொடர்ந்து நீடிக்க கூடாது. வறுமையில் இருந்து மீட்சி பெறுவதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 24 மாதங்களுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்குவதன் ஊடாக வறுமையை ஒழிக்க முடியும்.” எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *