கனடாவில், 120 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடிய செய்திகள் தெரிவித்துள்ளன.
42 வயதுடைய டிரக் சாரதியே இவ்வாறு நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டவராவார்.
ப்ளூ வோட்டர் பாலத்தில் அவரது ட்ரக் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, கனடாவில் தடைசெய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபரை கைது செய்த கனடிய பொலிஸார் கொக்கெய்ன் போதைப்பொருளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.