பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் இராணூவ கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஹங்வெல்லவில் ஶ்ரீலங்கா விசேட அதிரடி படையினருக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த முன்னாள் கொமாண்டோ சிப்பாய் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.