வேல்ஸ் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டெடுப்பு!

பிரித்தானியாவின் வேல்ஸ் கடற்கரையில் 32 வயது பெண்ணின் உடல் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேல்ஸின் பெம்புரோக் டாக் (Pembroke Dock) அருகே உள்ள பென்னார் (Pennar) என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் செவ்வாய் கிழமை மாலை கண்டெடுக்கப்பட்ட 32 வயது பெண்ணின் உடல் “சியான் பேட்ச்லர்” (Sian Batchelor) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவரது மரணம் மர்மமாக இருப்பதாக காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Pembrokeshire காவல்துறை மூலம் சியான் பேட்ச்லரின் குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர், அதில் அவர்களது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த அறிக்கையில், “எங்கள் இழப்பால் நாங்கள் உருக்குலைந்து போயுள்ளோம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சியான் அழகான, நகைச்சுவையான மற்றும் அன்பான நபர். அவரது நினைவுகளை நாங்கள் என்றும் போற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு உதவும் தகவல்களை வைத்திருப்பவர்களோ அல்லது பேச்சிலரை அவர் இறப்பதற்கு முன்னர் பார்த்தவர்களோ காவல்துறை தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *