எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு நியமித்திருந்த நிலையில், அக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது.
நியமனக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருக்கும் இக் கூட்டத்தின் இறுதியில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
