பெருவெள்ளத்தால் சிதைந்துள்ள ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத்தினர் பலர் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் முன்னெடுத்துள்ளனர். மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 205 பேர்கள் இறந்துள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், ஆனால் மொத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இன்னும் தேடப்படாத இரண்டாம் நிலை சாலைகளில் சிக்கியுள்ள கார்களில் பல சடலங்கள் காணப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணித்து சுத்தப்படுத்தவும் உடல்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.