எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வியாழக்கிழமை (29) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது.
“தேரவாத வர்த்தகப் பொருளாதாரம், 2025 இற்கு அப்பால் செல்லும் செயல்முறை, ஒளிமயமான சமுதாயத்தை நோக்கி, வெற்றிபெறும் தாய்நாடு, ஒன்றிணைந்த இலங்கை” ஆகிய 05 பிரதான கூறுகளை இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.
www.ranil2024.lk என்ற இணையதளத்தில் இந்த தேர்தல் விஞ்ஞானபனத்தை மும்மொழிகளிலும் பார்வையிட முடியும்.