2022-2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி Z -Score வெட்டுப் புள்ளிகள் இன்று வெள்ளிக்கிழமை (01) காலை வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 166,967 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுப்பேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அந்த அடிப்படையில் இவ்வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.