கடந்த மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள்ளார்.
அவருக்கான வழக்குகள் இன்னும் முற்றுப்பெறாம் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் நிலையில் வைத்தியரின் வழக்கறிஞ்ஞர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஏற்று பிணையில் இன்று வைத்தியர் அர்ச்சுனா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை கையளிப்பதற்கான காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி மதியம் 12:00மணியுடன் நிறைவடைய உள்ள நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனாவை அரசியல் நகர்வுகளுக்காக அவசர அவசரமாக அவரது வழக்கறிஞ்ஞர்கள் வெளியில் எடுத்துள்ளராக தெரியவந்துள்ளது.