இசையமைப்பாளரும், நடிகருமான, இயக்குனருமான விஜய் அன்ரனியின் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அன்ரனியின் மகள் லாறா தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளமையானது அனைவரையும் அதிர்ச்சிக்கும், வியப்பிற்கும் உள்ளாக்கியுள்ளது.
12 ஆம் வகுப்பு படித்துவரும் லாறா அண்மைய நாட்களாக யாருடனும் சரியாக பேசாதும், சாப்பாட்டில் ஒழுங்கின்மையாகவும் ஓர் மனவிரக்தியடைந்தவரைப் போலவே காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சியில் உறைந்திருக்கும் விஜய் அன்ரனியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து இரங்கல்களையும், ஆறுதல்களையும் திரையுலகத்தினர் செய்துவருகின்றனர்.