நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று(24) கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸார் அவரை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.